upload
United States Department of Health and Human Services
Industry: Government
Number of terms: 33950
Number of blossaries: 0
Company Profile:
United States Department of Health and Human Services, Radiation Emergency Medical Management
உணர்வற்ற அல்லது விழிப்புணர்வற்ற நிலையை உருவாக்கும் ஒரு மருந்து அல்லது இதர பொருள். உள்ளூர் மயக்கமருந்துகள் உடலின் ஒரு சிறிய பகுதியில் உணர்விழப்பை ஏற்படுத்துகின்றன. பிராந்திய மயக்கமருந்துகள் கை அல்லது கால் போன்ற உடல் பகுதிகளில் உணர்வை இழக்கச் செய்கின்றன. பொதுவான மயக்க மருந்துகள் உணர்வை இழக்கச் செய்வதுடன் விழிப்புணர்வையும் முழுமையாக இழக்கச் செய்கின்றன, அது ஒரு மிகுந்த ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல உணரவைக்கும்.
Industry:Health care
இதயத் துடிப்பையும் சீராக இதயம் இயங்குவதையும் கண்காணிக்க உடலில் பதியவைத்த ஒரு மின்னணுவியல் கருவி. இதயம் வழக்கம் போல் துடிக்காத பொழுது இது இதயத்திற்கு மின்றூண்டலை வழங்குகிறது. இவை மின்கலன்களால் செயல்படுவதுடன் நீண்ட மெலிதான மின்கம்பிகளால் இதயத்துடன் இணைக்கப் பட்டுள்ளன. இதனை செயற்கை இதய முடுக்கி என்றும் இதய முடுக்கி என்றும் அழைப்பார்கள்.
Industry:Health care
பொடி அல்லது தூள் வடிவத்தில் கிடைக்கும் ஒரு கனிமப் பொருள். புற்று நோய் சிகிச்சையில், புடைச்சவ்வு ஊறணி என்ற பெயரில் வழங்கும் ஒரு உபாதையை தடுக்க மலட்டு மாக்கல் தூள் பயன்படுகிறது. (நுரையீரலுக்கும் மார்பின் சுவருக்கும் இடையே நீர் கட்டிக்கொள்ளும் நியதிக்கு மாறான நிலைமை). மலட்டு மாக்கல் தூள் அந்த இடத்தில் உள்ளிடப் படுகிறது, அவ்வாறு அவ்விடத்தை மூடி வைக்கும் பொழுது, அங்கு நீர் மேலும் சேராது. பட்டுக்கல் எனவும் அறியப்படுவது.
Industry:Health care
பொடி அல்லது தூள் வடிவத்தில் கிடைக்கும் ஒரு கனிமப் பொருள். புற்று நோய் சிகிச்சையில், புடைச்சவ்வு ஊறணி என்ற பெயரில் வழங்கும் ஒரு உபாதையை தடுக்க மலட்டு பட்டுக்கல் பயன்படுகிறது. (நுரையீரலுக்கும் மார்பின் சுவருக்கும் இடையே நீர் கட்டிக்கொள்ளும் நியதிக்கு மாறான நிலைமை). பட்டுக்கல் அந்த இடத்தில் உள்ளிடப் படுகிறது, அவ்வாறு அவ்விடத்தை மூடி வைக்கும் பொழுது, அங்கு நீர் மேலும் சேராது. மலட்டு மாக்கல் தூள் எனவும் அறியப்படுவது.
Industry:Health care
சிறு நீர்ப்பையில் இருந்து சிறுநீர் பாய்வதை கட்டுப்படுத்த இயலாமை (அடிக்கடி சிறுநீர் கழித்தல்) அல்லது மலக்குடலில் இருந்து மலம் வெளியேறுவதை கட்டுப் படுத்த இயலாமை (அடிக்கடி மலம் கழித்தல்).
Industry:Health care
மார்பக திசுக்கள் அழற்சி அடைந்த நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக அது ஒரு நோய்த் தொற்று காரணம் ஏற்படுகிறது, அடிக்கடி நலமீட்பு சிகிச்சை பெற்றுவரும் தாய்மார்களிடம் அதிகமாக காணப்படுகிறது.
Industry:Health care
ஒருவனுடைய சுய மதிப்பு, தன்னம்பிக்கை, தன் மானம் ஆகிய உணர்ச்சிகள்.
Industry:Health care
உடலின் இரு உறுப்புகளுக்கு இடையே அல்லது உறுப்பிற்கும் உடலின் மேற்பரப்பிற்கும் இடையே அமைந்த வழக்கத்துக்கு மாறான ஒரு துளை அல்லது குழாய்வழி. புரை புண்கள் காயம், தொற்று, வீக்கம் காரணமாக ஏற்படலாம் அல்லது அறுவை சிகிச்சையின் காரணமாக உருவாகலாம்.
Industry:Health care
கணினிகள், புகைப்படக் கருவிகள், ஒளிநாடா கலந்தாய்வுகள், இணையதளம், செயற்கைக்கோள், கம்பியில்லா தகவல் தொடர்பு ஆகிய மின்னணு தகவல் சார்ந்த இதர தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி தூரத்தில் இருந்து சுகாதார பராமரிப்பு வழங்குதல்.
Industry:Health care
உடலின் வெப்பநிலை, பசி, தாகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி.
Industry:Health care
© 2025 CSOFT International, Ltd.